பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகும் சனத் ஜயசூரிய
இன்றைய SL vs Pak போட்டிக்குப் பிறகு சனத் ஜயசூரிய இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சனத் ஜயசூரிய வீழ்ந்து கிடந்த அணியை மீண்டும் எழுப்ப வேண்டும் என்ற உறுதியுடன் அவர் பொறுப்பேற்றார்.
வீரர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, அணிக் கட்டமைப்பு, உடற்பயிற்சி ஒழுங்கு — பல துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சனத் ஜயசூரிய கொண்டு வந்தார். சனத் ஜயசூரிய தேசத்தின் கிரிக்கெட்டுக்காக மனதார உழைத்தார்.

ஆனால்… அணிக்குள் ஒற்றுமையின்மை, விடாப்பிடி திமிர், அடாவடித்தனம், அணிக்குள் அணிசேர்த்தல் போன்ற செயல்பாடுகள் ஒரு பயிற்றுவிப்பாளரின் முயற்சிகளை பலவீனப்படுத்தினால் அதன் விளைவாக தோல்வி முகத்துடன் விலக வேண்டிய நிலை உருவாயுள்ளதாக கிரிகெட் ரசிகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.