உக்ரைன் - போலந்து எல்லையை நோக்கி வேகமாக சீறி பயந்த ரஷ்ய ஏவுகணை! புடின் ஆட்டம் ஆரம்பம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) போலந்து சென்று உள்ள நிலையில், உக்ரைன் போலந்து எல்லையில் ரஷ்ய துருப்புகள் திடீரென தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனின் எல்லை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் பிடன் சென்றுள்ளார். நேட்டோ நாடுகளில் ஒன்றான போலந்துக்கு ஜோ பைடன் சென்றது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
நேற்று வார்சோவ் பகுதியில் இருக்கும் போலந்து அதிபர் டுடாவின் மாளிகையில் அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார். ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளது.
நேட்டோ படைகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த முடியாது. நேட்டோவின் ஒரு இன்சை பிடிக்க வேண்டும் என்று கூட ரஷ்யா நினைக்க கூடாது. பிளவுபட்ட நேட்டோ குழுவை உருவாக்க வேண்டும் என்று ரஷ்யா நினைக்கிறது.
ஆனால் இந்த போர் காரணமாக நேட்டோ நாடுகளுக்கு இடையில் ஒற்றுமைதான் அதிகரித்துள்ளது. போலந்து - அமெரிக்கா இடையில் ஒற்றுமை அதிகரித்துள்ளது.
போலந்தின் பாதுகாப்புதான், அமெரிக்காவின் பாதுகாப்பு. இந்த போரில் ரஷ்யா வெற்றிபெறும் அறிகுறிகள் தெரியவில்லை. திட்டமிடல் ரீதியாக ரஷ்யா இந்த போரில் தோல்வி அடைந்துவிட்டது. சுதந்திரமான உலகம் தேவை.
உலக நாடுகள் ரஷ்யாவின் இந்த படையெடுப்பை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். ஜனநாயக நாடுகளுக்கும், ரஷ்யாவின் அலிகார்க்ஸுக்கும் இடையில் நடக்கும் மிகப்பெரிய போர் இது என்று ஜோ பைடன் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
போலந்து வார்சோவ் பகுதியில் இருக்கும் போலந்து அதிபர் டுடாவின் மாளிகையில் அதிபர் பைடன் பேசிக்கொண்டு இருந்த அதே நேரத்தில்தான் நேற்று லிவிவ் பகுதியில் ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்கியது.
லிவிவ் என்பது போலந்து எல்லையில் இருக்கும் உக்ரைன் நகரம் ஆகும். போலந்து எல்லையில் இருந்து 60 கிமீ தொலைவில் இந்த நகரம் உள்ளது. பிடன் இருந்த வார்சோவ் நகரத்தில் இருந்து வெறும் 340 கிமீ தூரத்தில்தான் இந்த நகரம் உள்ளது. இங்குதான் ரஷ்யா ஏவுகணைகளை வீசியது.
சரியாக பிடன் அங்கே இருக்கும் சமயத்தில் ரஷ்யா இப்படி லிவிவ் பகுதியில் ஏவுகணைகளை வீசி தாக்கி உள்ளது. இந்த போரில் லிவிவ் நகரத்தை ரஷ்யா பெரிதாக தாக்கவில்லை.
ஒரே ஒருமுறை மட்டுமே இதற்கு முன் அங்கு ரஷ்யா ஏவுகணைகளை ஏவியது. அதுவும் கூட 12 நாட்களுக்கு முன். ஆனால் இப்போது பிடன் போலந்து வந்திருக்கிறார் என்றதும் சரியாக எல்லையில் ரஷ்யா தாக்குதல் நடத்தி உள்ளது.
பைடனுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ரஷ்யா இந்த தாக்குதலை மேற்கொண்டு உள்ளது. பைடனுக்கு ரஷ்யா விடுத்த எச்சரிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. இருப்பினும் பைடனை பாதுகாக்க ஏவுகணைகளை மறித்து தாக்கும் சிஸ்டம்கள் போலந்தில் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனாலும் போலந்து எல்லைக்குள் ரஷ்யா தாக்குதல் நடத்த முடியாது. போலந்து நேட்டோ நாடு என்பதால் இங்கு ரஷ்யா தாக்கினால் அது நேட்டோ ரஷ்யா இடையிலான போராக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.