பாகிஸ்தானில் இன்று அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை ; பரபரப்பில் உலகம்
மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று (11) ஆரம்பமாகவுள்ள நிலையில் உலக நாடுகள் பெரும் பரப்ரப்பில் உள்ளன.
இந்த பேச்சுவார்த்தை காரணமாக பாகிச்தானில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், முக்கிய இடங்களில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வார கால போர்நிறுத்தம்
பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வென்ஸ் (J.D. Vance) உள்ளிட்ட குழுவினர் பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ளனர்.
ஈரான் சார்பாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) தலைமையிலான குழுவினரும் பாகிஸ்தான் சென்றடைந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதலை மேற்கொண்டிருந்தன.
அதிலிருந்து 40 நாட்கள் தொடர்ந்து மோதல்கள் நீடித்த நிலையில், அவற்றுக்குத் தற்காலிக இடைவேளை வழங்கும் வகையில் பாகிஸ்தானின் தலையீட்டுடன் ஏப்ரல் 8ஆம் திகதி முதல் இரண்டு வார கால போர்நிறுத்தம் தற்போது அமுலில் உள்ளது.
இரான் - இஸ்ரேல், அமெரிக்க யுத்தம் காரணமாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.