அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் ; உலக நாடுகள் பெரும் மகிழ்ச்சி
அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐ.நா அமைப்பு, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு தரப்பும் வரவேற்பு அளித்துள்ளதுடன், அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் உகல வாடுகாளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா-ஈரான் புரிந்துணர்வு
இந் நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கட்டார் பிரதமர் வரவேற்றதோடு, அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இந்த மோதலை நிறுத்த இராஜதந்திர முயற்சிகளில் கட்டார் ஒரு பங்கை வகித்ததுடன், சமரசம் செய்ய ஈடுபட்ட முக்கிய நாடுகளில் ஒன்றாகவும் இருந்தது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதற்கு வாழ்த்துகள். உடனடி மற்றும் நிரந்தர போர்நிறுத்தம், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும்.
அதேசமயம் , இந்த ஒப்பந்தத்தை எளிதாக்க உதவியதற்காக பாகிஸ்தான், கட்டார், எகிப்து, சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பிற பிராந்திய நாடுகளுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் நன்றி தெரிவித்துள்ளார்.