அமெரிக்கா–ஈரான் உடன்படிக்கை ; ஈரானிய இராஜதந்திரத்திற்கு பெரும் வெற்றி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான உடன்படிக்கையை ஈரான் தனது வெற்றியாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது.
ஈரானின் 10 அம்சக் கோரிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தீர்மானம் ஈரானுக்குக் கிடைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க "வெற்றி" என அது வர்ணித்துள்ளது.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையும் (Supreme National Security Council) இது குறித்து சாதகமான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளது.
தற்போதைய சூழல் ஈரானின் கையை ஓங்கச் செய்துள்ளதாகவும், இது ஈரானிய இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அந்தச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக போர் நிறுத்தத்தை அறிவிக்கும் முன்னரே, ஈரான் இந்த உடன்படிக்கைக்கு இணங்கியிருக்கலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.