ஒரு வருடத்திற்குப் பின்னர் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 300 ரூபாவை விட வீழ்ச்சி
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (02) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 290 ரூபாய் 30 சதம், விற்பனைப் பெறுமதி 299 ரூபாய் 35 சதமாகவும் பதிவாகியுள்ளது.
முன்னதாக கடந்த 2023 ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 298.91 ரூபாவாக காணப்பட்டது.
இந்தநிலையில் ஒரு வருடத்திற்குப் பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி ரூ 300ஐ விட வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
இதேவேளை ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384 ரூபாய் 28 சதம், விற்பனைப் பெறுமதி 399 ரூபாய் 22 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபாய் 75 சதம், விற்பனைப் பெறுமதி 333 ரூபாய்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபாய் 21 சதம், விற்பனைப் பெறுமதி 356 ரூபாய் 61 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபாய் 79 சதம், விற்பனைப் பெறுமதி 223 ரூபாய் 48 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 62 சதம், விற்பனைப் பெறுமதி 208 ரூபாய் 65 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 8 சதம்.