இலங்கை பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் அமெரிக்கா காங்கிரஸ் விவாதம்
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் இலங்கையில் மனித உரிமைகள் மீறல் ஆகியவற்றைப் குறித்து அமெரிக்கா காங்கிரஸ் மனித உரிமைகள் ஆணைக்குழு விவாதித்துள்ளது.
இலங்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன், இலங்கை தொடர்பில் அங்கத்தவர்களுக்கு பங்கேற்பாளர்களுக்கும் விளக்கமளிக்க அழைப்பு விடுத்திருந்தார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் மீதான அவற்றின் தாக்கம் குறித்து விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் இளநகைப் பற்றி பேசிய அம்பிகா சற்குணநாதன் பேசியதாவது,
" நான் 'தன்னிச்சை' என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன். ஏனெனில் விசாரணையின் பொது கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் அல்லது நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பதுவத்தில்லை. மேலும் பயங்கவைத்த தடை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபருடன் அவர்களின் வேலையின்போது இடம்பெற்ற பணபரிமாற்றத்தை வெஸ்டர்ன் யூனியனில் செயல்படுத்திய ஒருவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலைகளில் நடத்திய ஆய்வின்படி பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஆணைகள் 84 சதவீத பேர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிலும் 90 சதவீதம் பேர் சித்தர்வதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மேலும் 95 சதவீத ஆண்கள் கையொப்பமிட்ட ஆவணம் சிங்களத்தில் எழுதப்பட்டிருந்ததும் அவர்களுக்கு தெரியாத மொழியென்பதும் தெரியவந்தது என அம்பிகா சற்குணநாதன் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டம் என்பது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்க்கும் போர்வையில் மிரட்டும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் அச்சுறுத்தல், எதிர்ப்பை அடக்குதல், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் நடவடிக்கைககளை கட்டுப்படுத்த பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.