மத்திய கிழக்கு போர்; இரண்டாம் உலக போருக்குப் பிறகு அமெரிக்காவில் இராணுத்துக்கு கட்டாய ஆள்சேர்ப்பு!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு தனது இராணுவக் கட்டாய ஆள்சேர்ப்பு முறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை அமெரிக்கா கொண்டு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி, இராணுவ சேவைக்குத் தகுதியான இளைஞர்கள் இனி தானாகவே (Automatically) பதிவு செய்யப்படும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தற்போதுள்ள சட்டப்படி, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும் 'தேர்வு சேவை அமைப்பில்' தங்களாகவே முன்வந்து பதிவு செய்வது கட்டாயமாகும்.
ஆனால், டிசெம்பர் 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய விதிகளின்படி, தகுதியுள்ள நபர்களை அரசே தனது தரவுத்தளங்கள் மூலம் நேரடியாகப் பதிவு செய்யும் என தெரிவிக்கபடுகின்றது.
அதேவேளை இரண்டாம் உலக போருக்குப் பிறகு அமெரிக்க இராணுவக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.