அமெரிக்காவும் இஸ்ரேலுல் பேரழிவை சந்திக்கும்; ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானின் ராணுவத்திறனை முழுமையாக மதிப்பிட தவறிய அமெரிக்காவும் இஸ்ரேலும் பேரழிவுகரமான தாக்குதல்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்.
அமெரிக்கா அவமானப்பட்டு இழிவடைந்து நிரந்தரமான வருத்தத்திற்கு ஆளாகி சரணடையும் வரை இந்த போர் தொடரும் எனவும் ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போர் ஒரு மாதத்தை தாண்டியும் நின்ற பாடில்லை
அணு ஆயுதம் வைத்திருப்பதாக ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கிய போர் ஒரு மாதத்தை தாண்டி விட்டது. ஆனாலும் போர் நின்ற பாடில்லை.
ஒருபக்கம் அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளான துபாய், சவுதி அரேபியா, பஹ்ரைன், அபுதபி உள்ளிட்ட வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
அமெரிக்க இராணுவம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை; உலகின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிப்போட்ட டிரம்ப் புதிய அச்சுறுத்தல்
இதனால் வளகுடா நாடுகளில் பல எண்ணெய் கிணறுகள் பாதிக்கப்பட்டிருக்கிறது.. இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் செல்லவில்லை.
ஒருபக்கம் கச்சா எண்ணெய் கொண்டு வரும் கப்பல்களை ஈரான் தனது ஹோர்மூஸ் நீரிணை அருகே தடுத்து நிறுத்தி விடுகிறது. இதன் காரணமாக உலக நாடுகள் பலவற்றிலும் கடந்த சில நாட்களாகவே கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
அதேவேளை ஒருபக்கம் ஈரானை அழுத்தி விட்டோம்.. இறந்துபோனவர்கள் எல்லாமே பயங்கரவ்வாதிகள்.
இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என ஈரானை ஜெயித்து விட்டது போல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.