அமெரிக்க இராணுவம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை; உலகின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிப்போட்ட டிரம்ப் புதிய அச்சுறுத்தல்
ஈரானின் எஞ்சியுள்ள உட்கட்டமைப்புகளை அழிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானின் புதிய தலைமைப்பீடத்திற்கு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

நீடிக்கும் போரால் உலகில் பதற்றம்
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,"உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த எமது இராணுவம், ஈரானில் எஞ்சியுள்ளவற்றை அழிக்கும் பணிகளை இன்னும் தொடங்கக்கூட இல்லை.
அடுத்ததாக பாலங்கள், அதனைத் தொடர்ந்து மின் உற்பத்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படும், ஈரானின் புதிய ஆட்சித் தலைமை என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்துள்ளது, அது மிக விரைவாகச் செய்யப்பட வேண்டும்" என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஈரான் மீதான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என கடந்த நாட்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த நிலையில், ஈரானுக்கான அவரது இந்த புதிய எச்சரிக்கை உலக நாடுகளின் எதிர்பார்ப்பை தவிடுபொரியாக்கியுள்ளது.
ஈரான் இஸ்ரேல் போரினால், உலகில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டு நெருக்கடியால் பல நாடுகளும் தவித்து வருகின்றன.