அமெரிக்க தூதுவர் - சஜித் பிரேமதாச இடையே முக்கிய சந்திப்பு!
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சுங் (Julie Chung) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது நேற்றைய தினம் திங்கட்கிழமை (07-03-2022) இடம்பெற்றது.
மேலும் இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அந்த வலுவான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதன் மதிப்பை வலியுறுத்தினார்.
குறிப்பாக இலங்கையுடன் நிலவும் சமூக பொருளாதார கலாசார உறவுகள் தொடர்பில் கவனம் செலுத்திய தூதுவர் அதனை மேலும் வலுப்படுத்த அவசியமான காரணிகளை ஆராய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.