காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு பொலிஸாரின் அவசர அறிவிப்பு!
காலி முகத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் பயிர்களை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
இது குறித்து நாளை (05) மாலை 05.00 மணிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைவாகவும், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் கோட்டை பொலிஸார் மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அறிவுறுத்தல்களின்படி, செயல்படாத நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொதுமக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.