ஒமிக்ரோன் தொற்று தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட அவசர அறிவித்தல்
நாடு மீண்டும் முடக்க நிலைக்கு செல்லாதிருக்க மக்கள் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இன்றையதினம் (05) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இதன்போது தெரிவித்தது, கொரோனாவின் ஆபத்தான Omicron மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
மேலும், புதிய கொரோனா மாறுபாடு குறித்து நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் முழுமையான பகுப்பாய்வுக்குப் பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.