பிக்குவால் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமிக்காக விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
அநுராதபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான 15 வயதுடைய சிறுமியின் சார்பில் மன்றில் முன்னிலையாவதற்கு சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை நியமிக்குமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அநுராதபுர நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கியதாக தெரிவிக்கப்படும் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பில் மன்றில் முன்னிலையாவதற்கு சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்கவிடம் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு அறக்கட்டளையின் தலைவர் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும், அவர் தொடர்பில் தகாத வார்த்தைகளையும் ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவித்த சர்வஜன அதிகாரம் காட்சியின் உறுப்பினர் திலும் அமுனுகமவை உடனடியாகக் கைது செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
[N9TUQVI]
மே மாதம் 22ஆம் திகதி அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள இந்த வழக்குத் தொடர்பாக, வைத்தியர் துஷ் விக்ரமநாயக்க சட்ட மா அதிபருக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.