மேல் மாகாணத்திஒல் விசேட நடவடிக்கை; தற்காலிகமாக தங்கியுள்ளவர்களின் விபரங்கள் சேகரிப்பு
மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்களின் தகவல்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மேல்மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 123 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 11 ஆயிரத்து 188 நபர்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைஅய மேல் மாகாணத்திலுள்ள ஏனைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் எதிர்வரும் நாட்களில் தகவல் சேகரிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் மேலும் கூறியுள்ளது.