நாட்டில் மின்சார விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் மின்சார விநியோகத்தில் தற்போது எந்தவிதப் சிக்கல்களும் அடையாளம் காணப்படவில்லையெனவும், மின்சார விநியோகத்தைப் பாதிப்பின்றி முன்னெடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மழைவீழ்ச்சிக் குறைவு மற்றும் நிலக்கரி இறக்குமதித் தாமதம் குறித்த அச்சங்களுக்கு மத்தியில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேவையான நடவடிக்கைகள்
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த எரிசக்தி பிரதி அமைச்சர், மின்சார விநியோகத்தைப் பாதிப்பின்றி முன்னெடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலக்கரித் தாமதம் குறித்த செய்திகளுக்குப் பதிலளித்த அவர், சில கப்பல்கள் மே 26 வரை கால அவகாசம் கோரியுள்ள போதிலும், ஏனைய நிலக்கரித் தொகுதிகள் ஏற்கனவே நாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இதனால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படாது என அவர் கூறியுள்ளார்.