மலையக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்! ஜீவன்
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) மலையக மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்ள, மலையக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர் எம். வேலுகுமார் (M. Velu Kumar) இன்று நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ( (Jeevan Thondaman)) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர் வேலுகுமார் (M. Velu Kumar) தெரிவிக்கையில்,
பெருந்தோட்டங்களில் உள்ள வைத்திய நிலையங்கள் உபயோகத்தில் இல்லை. மேலும் வைத்திய நிலையங்களில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. என்றாலும், கொரோனா நிலைமையில் மக்களை பாதுகாப்பதற்கு இந்த வைத்திய நிலையங்களுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கி இருக்கின்றதா என கேள்வி எழுப்பினார்.
மலையக மக்களுக்கு அமைக்கப்பட்ட வீடுகளை எமது காலத்தில் விமர்சித்த நீங்கள் தற்போது அந்த வீடுகளை மக்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருவது மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டங்களில் இருக்கும் வைத்திய நிலையங்கள் பல ஆண்டுகளாக மோசமான நிலையிலேயே இருந்து வருகின்றன என இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதிலளித்துள்ளார்.
இதற்கு ஒரு தீர்வு மலையக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுகாதார அமைச்சருக்கு கோரிக்கை ஒன்றை முன்வைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.