வரப்போகும் சனி ஜெயந்தி ; அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தின் அமாவாசை நாளில் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்த வருடம் சனி ஜெயந்தி மே 27ஆம் திகதி வருகிறது. இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகள்
ரிஷபம் : வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல்நலப் பிரச்சினைகள் தீரும். தொழில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள் வரும். கடனில் இருந்து விடுபடலாம். புதிய வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கையில் நேர்மறை ஆற்றல் பரவும்.
மிதுனம்: உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த வேலைகள் முடிவடையும். நல்ல செய்திகளைப் பெறலாம். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். நிதி சிக்கல்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
மகரம்: புதிய வீடு அல்லது வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். அசாதாரண வெற்றியை அடைய முடியும். தொழில் ரீதியாக நன்மைகள் கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டம் கைகூடி வரும். முதலீடு நல்ல வருமானத்தைத் தரும்.