தேரரின் பொலிஸ் பாதுகாப்பு உண்மைக்குப் புறம்பான தகவல்; பொலிஸ் விளக்கம்
கதிர்காமம் கிரிவெஹெர புராதன விகாரையின் நாயக்க தேரர் வணக்கத்திற்குரிய கோபவக்க தம்மிந்த தேரரின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் செய்தி குறித்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அறிக்கை வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையின்படி,

பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் 16 பொலிஸ் உத்தியோகத்தர்கள்
கதிர்காமம் மகா தேவாலய வளாகத்திற்குள் அஷ்ட்டபல போதி மரமும், கதிர்காமம் கிரிவெஹெர மற்றும் ஏனைய ஆலயங்களும் அமைந்துள்ளதாகவும், இந்த வளாகத்தின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் 16 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஒரு சிவில் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கிரிவெஹெர புராதன விகாரையின் நாயக்க தேரரின் பாதுகாப்புக்காக 2018 ஆம் ஆண்டு முதல் ஆலய காவலரணில் இணைக்கப்பட்டுள்ள 17 உத்தியோகத்தர்களில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, கதிர்காமம் ஆலய வளாகத்தில் இராணுவப் பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளதுடன், அந்தக் இராணுவப் பிரிவினரும் கதிர்காமம் கிரிவெஹெர புராதன விகாரையின் நாயக்க தேரரின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, கதிர்காமம் கிரிவெஹெர புராதன விகாரையின் நாயக்க தேரர் வணக்கத்திற்குரிய கொபவக்க தம்மிக தேரரின் பாதுகாப்பு அல்லது புனித தலத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி பொய்யானது என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.