இதுவரை வெளிவராத ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள் ; சூத்திரதாரியை வெளிப்படுத்தும் மைத்திரி
இதுவரை குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கூட கண்டுபிடிக்க முடியாத ஈஸ்டர் தின தாக்குதல் சூத்திரதாரியை வெளிப்படுத்த தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு அறிவித்ததை அடுத்து நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்
மைத்திரிபால சிறிசேனவின் இந்த வெளிப்படுத்தல் சர்வதேச நாடுகள் மற்றும் ஊடகங்களின் கவனமும் இலங்கையின் பால் திரும்பியுள்ளது.
இத்தகவல் இலங்கை அரசியல் அரங்கில் தேர்தல்களை வரவேற்கும் நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மைத்திரிபாலவை கைது செய்யுமாறும் விசாரணை நடத்துமாறும் அவர் உண்மைகளை மறைத்து வந்ததாகவும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவர் மீது குற்றக்கணைகளைவிடுத்துள்ளனர்
இந்நிலைமையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இவரது கூற்று தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலீஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மைத்திரிபால சிறுசேனாவுக்கு உயிர் அச்சுறுத்தல்
இதற்கிணங்க மைத்திரிபால சிறிசேன நாளை குற்றப் புலனாய்வு திணைக்கள பிரதான காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் படுகிறது இதற்கு அமைய அவர் தனது சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.
மைத்திரிபால சிறிசேன நாளை வழங்கப் போகும் வாக்கு மூலத்தை அறியவும் ஈஸடர் தாக்குதல் சூத்திரதாரிகளை அறியவும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை அறிவிக்க ஊடகங்கள் நாளை மைத்திரிபாலவை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஊடக சந்திப்பிலும் சந்திக்க தயாராகி உள்ளனர்.
இதேவேளை இத்தவல்களை வழங்குவதால் மைத்திரிபால சிறுசேனாவுக்கு உயிர் அச்சுறுத்தல ஏற்படுமாயின் போதிய சகல பாதுகாப்புக்களையும் வழங்க தயாராக இருப்பதாக பொலீஸ் மா அதிபர் தேச பந்து தென்னகோன் இன்று அறிவித்துள்ளார்.