தமிழர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகங்கள்!
மட்டக்களப்பு - செங்கலடி சுகாதார பிரிவின் கீழ் உள்ள உணவகங்களில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்த 4 உணவக உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உணவக உரிமையாளர்களுக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை (22) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
தலா 10 ஆயிரம் ரூபா தண்டம்
உணவக உரிமையாளர்களை எச்சரித்த நீதவான் , தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்துமாறும் உத்தரவிட்டதுடன் கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களை அழிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.
மேலும் இந்த திடீர் சோதனை நடவடிக்கையில் மேலும் சில உணவகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக எதிர்வரும் 26ம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பரமானந்தராசா தெரிவித்தார்.