சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதாரமற்ற உணவா? எழுந்த புகார்
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தலைமையில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவு பழுதடைந்திருந்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்நிகழ்வு கண்டி பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது .
இதன்படி இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கண்டி நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட இந்த சிற்றுண்டியில் இருந்த ஒரு உணவு பழுதடைந்ததாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் இருந்ததாகவும் இதனால் அங்கிருந்த பலர் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பொது சுகாதாரம் தொடர்பான அதிகாரிகள் குழு கலந்து கொண்ட நிகழ்வில், சுகாதாரமற்ற உணவு வழங்ப்பட்டமைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, இந்த விடயத்தை சமரசம் செய்ய ஏற்பாட்டுக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.