யாழில் நிலவும் சீரற்ற காலநிலை; 30,228 பேர் பாதிப்பு!
கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்து வந்த நிலையில் தற் போது சீரான வானிலை நிலவுவதாக மாவட்ட அரச அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொட்டித்தீர்த்த மழையினால் யாழ். மாவட் டத்தில் 9 ஆயிரத்து 105 குடும் பங்களைச் சேர்ந்த 30ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை , வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை நீக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த திங்களன்று கடைசியாக 240 மில்லி மீற்றருக்கும் அதிக மான மழை பெய்துள்ளது.
இதனால் தாழ்நிலப் பகுதி கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் 9 ஆயிரத்து 105 குடும்பங்களைச் சேர்ந்த 30ஆயிரத்து 308 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் அரச அதிபர் தெரிவித்தார்.