முன்னாள் ஜனாதிபதி ரணில் மனைவி தொடர்பில் பலரும் அறியா தகவல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்க, பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கொழும்பு வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் எந்தவொரு ஆடம்பரமும் இல்லாத , ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்ரமசிங்க தொடர்பில் பலரும் அறியாத தகவல்கள் வெளியாகியுள்ளது.
எந்தவொரு ஆடம்பரமும் இல்லாதவர் மைத்ரி விக்ரமசிங்க
இன்றைய பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் சரோஜா, பெண் பாராளுமன்ற உறுப்பினர் கொட்டஹச்சி உள்ளிட்டோர் பேசும் பெண்ணிய சுதந்திரம் தொடர்பாக 25 வருடங்களுக்கு முன்பாகவே மிகத் தீவிரமான அறிவியல் சார்ந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்தான் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க அவர்கள்.
இதை விட மேலும் ஒரு படி சொன்னால் இன்று பல பெண்கள் அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்து உயர்ந்த நிலையில் இருப்பதற்கு சிறிமாவோ, சந்திரிக்கா போன்றோர் வரிசையில் முக்கிய விதை போட்டவரும் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க அவர்கள்தான்.
ஆறு முறை பிரதமரின் மனைவியாகவும், ஒரு முறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் மனைவியாகவும் இருந்தபோதும்கூட அரச வளங்கள், வாகனங்கள், பாதுகாப்பு போன்றவற்றை மைத்ரி விக்ரமசிங்க பயன்படுத்தாதவர்.
களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை தலைமைப் பேராசிரியராகவும், Center for Gender Studies இன் முதன்மை இயக்குனராகவும், லண்டனில் உள்ள University of Sussex இன் வருகைதரு விரிவுரையாளராகவும், UNDP, UNESCO, CIDA,NORAD ஆகிய சர்வதேச அமைப்புகளிலும் பணியாற்றி வருகிறார்.
அதுமட்டுமல்லாது Gender Equality and Equity தொடர்பாக பல்வேறு ஆய்வுகள், பயிற்சி வழங்குதல், கொள்கை மேம்பாடு, மதிப்பீடு வழிகாட்டுதல் போன்றவற்றோடு உலகின் பல நாடுகளிலுமுள்ள பல பல்கலைக்கழகங்களில், ஆராய்ச்சி நிறுவனங்களில் இது தொடர்பான பணிகளில் மைத்ரி விக்ரமசிங்க செயற்பட்டு வருகிறார். இதுவரை,
1. Metaphors of the Familiar: Reflections on the Politics of Gender in Sri Lanka (2006, 2010 Penguin edition)
2. Towards Gender Equity / Equality: A Chronicle of the University of Kelaniya’s Gender Studies (2022)
3. University Space and Gender: Comparative Perspectives from South Asia and Africa (2012, Co-edited)
4. Feminism, Internationalism and Nationalism in Sri Lanka (2014, Routledge) ஆகிய நூல்களோடு,
1. Feminist Research Methodologies in Sri Lanka
2. Higher Education, Globalisation and Gender
3. Gender and Nation in Post-colonial Sri Lanka ஆகிய கட்டுரைகளினையும் எழுதியுள்ளார்.
இத்தனையையும் பல வருடங்களாக அவர் செய்து கொண்டிருப்பது பணத்திற்காக அல்ல அது அவரிடம் கொட்டிக் கிடக்கின்றது. மாறாக பெண் சுதந்திரத்தையும், அவர்கள் முன்னேற்றம் கருதியும் அறிவுப் பங்களிப்பினையே மைத்ரி விக்ரமசிங்க செய்கிறார் என்பதுவே உண்மை.
பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க அவர்களின் இந்த அளப்பெரும் சமூகப் பணியினை கௌரவப்படுத்தி ஐக்கிய இராச்சியத்தின் University of Wolverhampton பல்கலைக்கழகமானது அவருக்கான கௌரவ கலாநிதி பட்டத்தினை "Honorary Professorship" இன் அடிப்படையில் Gender Equality and Equity இல் அவரின் பங்களிப்பிற்கான கலாநிதி பட்டம் வழங்க முன்வந்து அழைப்பு விடுத்தது.
இது இலங்கை நாட்டிற்கான கௌரவமாகவே கருதப்பட வேண்டும் என்பதோடு ஜனாதிபதியின் மனைவி என்பதற்காக மைத்ரி விக்ரமசிங்க மீதான இந்த புகழ் வெளிச்சம் மறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது மனைவியின் தூய இலக்கிற்காகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பக்க பலமாக இருந்த கணவனாகவே ரணில் விக்கிரமசிங்க பார்க்கப்பட வேண்டியவர் என சமூகவலைத்தளவாசிகள் பதிவிட்டுள்ளனர்.