களுத்துறை கடற்கரையில் தந்தைக்கும் மகளுக்கும் காத்திருந்த அதிர்ச்சி; பொலிஸார் குழப்பம்
களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தந்தை மற்றும் மகளும் சடலத்தை கண்டு 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் அளித்தனர்.
தலை மண்ணிற்குள் மூடிய நிலையில் சடலம்
கடற்கரையில் குப்புற விழுந்து தலை மண்ணிற்குள் மூடிய நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் 55 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் எனவும் , அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் கருப்பு நிற நீண்ட கால்சட்டை, பெல்ட் மற்றும் வெள்ளை டி-செட் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சம்பவம் குறித்து களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.