வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல்கலைகழக மாணவியில் மோதிரம் மாயம்!
யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பல்கலைகழக மாணவி ஒருவருடைய தங்க மோதிரம் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2ம் திகதி மாலை மேற்படி மாணவி திடீர் மயக்கமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் மாணவி மயக்கம் தெளிந்து பார்த்தபோது கையிலிருந்த மோதிரம் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக உடனடியாகவே மாணவி வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்ற நிலையில், வைத்தியசாலை நிர்வாகம் அதனை பொலிஸ் நிலையம்வரை கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.