இலங்கைக்கு பெருமை சேர்த்த பல்கலைக்கழக பேராசிரியர்கள்
உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் களனி பல்கலைக்கழகத்தின் நான்கு பேராசிரியகள் இடம்பிடித்து நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அந்தவகையில் உலகின் முதல் 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்கள் உள்ளனர்.
எல்சேவியர் வழங்கிய ஸ்கோபஸ் தரவு
அதன்படி மருத்துவ பீடத்தின் பேராசிரியர் ஜானக டி சில்வா, களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் சித்த மருத்துவ பிரிவின் சிரேஷ்ட பேராசிரியருமான நிலாந்தி டி சில்வா, பொது சுகாதார பீடத்தின் பேராசிரியை அனுராதனி கஸ்தூரிரத்ன, பேராசிரியர் அசித டி சில்வா ஆகியோர் இப்பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.
எல்சேவியர் வழங்கிய ஸ்கோபஸ் தரவைப் பயன்படுத்தி, அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு குழு இந்த பகுப்பாய்வு நடத்தியது.
அதில் இலங்கையைச் சேர்ந்த 38 விஞ்ஞானிகளின் பட்டியலில் நான்கு பேராசிரியர்களும் உள்ளடங்குகின்றதாக கூறப்படுகின்றது.