இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் தந்தையை இழிவுபடுத்திய பல்கலைகழகம்!
இலங்கையின் முன்னாள் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க வின் தந்தை பண்டார நாயக்கவின் பெயர் , தவறாக பெயரிடப்பட்ட அழைப்பிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இலங்கையில் பிரசித்தி பெற்ற பல்கலைகழகமான மொறட்டுவ பல்கலைகழக பட்டமளிப்பு விழாவிற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ் ஒன்றே இவ்வாறு எழுத்துபிழையுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது.
மொறட்டுவ பல்கலைகழக பட்டமளிப்பு விழா பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுவதாக அந்த அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
மிக மோசமான எழுத்துப்பிழை
எனினும் மிக மோசமான எழுத்துபிழையுடன் கூடிய அந்த அழைப்பிதழில் தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில் , அது தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை அரசியலில் பெரும் செல்வாக்கி செலுத்திய ஒருவராக திகழ்ந்த பண்டாரநாயக்கா, உலகின் முதல் பெண் பிரதமர் எனும் பெருமையை பெற்ற இலங்கை பிரதமராக மூன்று முறை திகழ்ந்த சிறிமாவின் கணவராவார்.
1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா, இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.
அதுமட்டுமல்லாது இலங்கை சுத்திர கட்சியை ஸ்தாபித்தவரும் இவரே ஆவார்.
தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஞானசார பௌத்த பிக்குவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.