பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையை முதலிரவுக்காக கொடுத்த அதிகாரிகள்!
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் புதுமண தம்பதியின் முதலிரவுக்காக பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையை அதிகாரிகள் வாடகைக்கு விட்ட சம்பவம் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
காக்கிநாடாவில் உள்ள ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையே இவ்வாறு அதிகாரிகளால் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அங்குள்ள அறைகளில் சிலவற்றை பேராசிரியர் ஒருவரின் சிபாரிசின் பேரில், கடந்த 18, 19 ஆகிய திகதிகளில் புதுமண தம்பதியின் முதலிரவுக்காக பல்கலைக்கழக அதிகாரிகள் வாடகைக்கு விட்டுள்ளனர்.
இந்நிலையில் இருபதாம் திகதி அங்கு சென்று பார்த்தவர்கள், அறை அலங்கரிக்கப்பட்டிருந்த விதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே, அறை அலங்கரிக்கப்பட்டிருந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் விருந்தினர் மாளிகையை பல்கலைக்கழக மகளிர் விவகார இயக்குநர் ஸ்வர்ண குமாரி முன்பதிவு செய்ததாகவும், எங்கள் ஊழியர் ஒருவர் மற்றொரு பேராசிரியரின் மாணவர் உபயோகிக்க கெஸ்ட்ஹவுஸை பதிவு செய்தார்.
ஆனால் அது பயன்படுத்தப்பட்ட நோக்கம் தவறானது என்றும் , அது குறித்து விசாரணையைத் தாம் தொடங்கியுள்ளதாகவும் பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சில பல்கலைக்கழக ஊழியர்கள் விருந்தினர் மாளிகையை அலங்கரிக்க உதவியதாகவும், வீடியோ பதிவிற்கு ஏற்பாடு செய்ததாகவும் நம்பப்படுகிறது. அத்துடன் தம்பதியினர் இந்த வீடியோவை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும், அது பொதுவில் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த விடயங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.