விசேட தேவையுடைய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான தகவல்
அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களை அனுமதிப்பதன் மூலம், உயர் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விசேட தேவையுடைய மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

தங்குமிட வசதி
தற்போது ஒரு சில பல்கலைக்கழகங்கள் மாத்திரமே இவ்வாறான மாணவர்களை அனுமதிக்கின்ற போதிலும், எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலை போன்ற பாடத்துறைகளிலும் அவர்களை இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மாணவர் தங்குமிட வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், பல்கலைக்கழகங்களின் விடுதி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 1.5 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.