கொழும்பு நாலந்தா கல்லூரி விவகாரம்; சர்ச்சை ஆசிரியைகள் தொடர்பில் புதிய தகவல்
கொழும்பு நாலந்தா கல்லூரியின் முன்னாள் தலைமை மாணவருடன் தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு பெண் ஆசிரியைகள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு மாகாண கல்வி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் , இரண்டு ஆசிரியர்களும் இன்னும் மாகாண கல்வி அலுவலகத்தில் பணிக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

பாடசாலை முதல்வரிடமிருந்து முதற்கட்ட விசாரணை
சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா, பாடசாலை முதல்வரிடமிருந்து முதற்கட்ட விசாரணை அறிக்கையைப் பெற்றுள்ளதாகவும், அதன் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
அதேசமயம் சம்பவம் தொடர்பில் தற்போது பள்ளிக்குள் ஒரு உள்ளக விசாரணையும் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னாள் தலைமை மாணவத் தலைவர் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் மாணவர் சங்கமும் கலைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான வீடியோக்கள் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, முன்னாள் தலைமை மாணவத் தலைவர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் இடையே தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமை குறிப்[பிடத்தக்கது.