விரைவில் திறக்கப்படவுள்ள பல்கலைகழகங்கள்!
பல்கலைக்கழகங்களில் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் இரண்டு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியதன் பின்னர் பல்கலைக்கழகங்களை விரைவில் மீண்டும் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த நோக்கத்திற்காக சுகாதாரத் துறையுடன் இணைந்து விரைவான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக வும் அவர் கூறினார்.
பல்கலைக்கழகங்களில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றத்திற்கான கண்காணிப்பு அமைப்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே சுகாதாரத் துறை துணைவேந்தர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை அனைத்து பல்கலைக்கழகங்களும் தற்போது மூடப்பட்டிருந்தாலும், கல்வி நடவடிக்கைகள் வெற்றிகரமாக ஒன்லைனில் மேற்கொள்ளப்படுகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.