இலங்கை விமானங்களுக்கு கைகொடுக்கும் இந்தியா
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜெட் எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க, இந்திய விமான நிலையங்களில் நீண்ட தூர விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என இந்திய அரசு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி இதுவரை, திருவனந்தபுரம், சென்னை, கொச்சி விமான நிலையங்களில், கடந்த பதினைந்து நாட்களில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள், மிகக் குறுகிய அறிவிப்பில், ஆன்டைம் சேவைக்காக சொத்துக்கள் மற்றும் மனிதவளத்தைத் திரட்டி எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் பல இந்திய விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பங்காளிகளாக நாங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுடன் இணைந்துள்ளோம் என இந்திய அரசு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.