ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவரின் மகன் மீது இரவு நடத்தப்பட்ட தாக்குதல்!
ஐக்கிய காங்கிரஸ் கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்தின் மகன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் 28 வயதான ஷாஹிட் முபாறக் என்பவர் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் வைத்து திங்கட்கிழமை (14-08-2023) இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது வாகனத்தில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த வேளை ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஷாஹிட் முபாறக் மீது இனந்தெரியாத இருவர் தாக்குதல் மேற்கொண்டு தலைமறைவாகியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் தற்போது கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திலும் குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளானவர் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் என்பதும் அண்மைக்காலமாக கட்சி நடவடிக்கையில் தீவிரமாக செயற்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.