யாழில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த நபரின் அடாவடி
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற உதைப்பந்தட்ட போட்டியில் அறிவிப்பாளராகக் கடமையாற்றியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூர்க்கத் தனமாக தாக்குதல்
உதைப்பந்தாட்ட போட்டியில் அறிவிப்பாளராகக் கடமையாற்றி விட்டு வெளியேறிய போது, வெளிநாட்டிலிருந்து வந்திருந்த நபர் உள்ளிட்ட கும்பல் தம் மீது மூர்க்கத் தனமாக தாக்குதல் நடத்தியதாக சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
அத்துடன் அவர் அணிந்திருந்த விளையாட்டு கழகத்தின் உத்தியோகபூர்வ ஆடையையும் கிழித்தெறிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் துரித விசாரணைகளை முன்னெடுத்து, தாக்குதல் நடாத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.