ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய UnionPay
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணச்சீட்டுகளை , யூனியன் பே (UnionPay) ஊடாக பணத்தை செலுத்தி முன்பதிவு செய்யும் வசதியை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது யூனியன் பே இன்டர்நேஷனல் மற்றும் இலங்கை வங்கி (Bank of Ceylon) ஆகியவற்றுடன் இணைந்து இந்த புதிய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.
யூனியன் பே பணத்தை செலுத்தவும் பணத்தை பரிவர்த்தனை செய்யவும் சீனாவால் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச அட்டை ஒன்று ஆகும். இந்த புதிய முறைமை இணையவழி கட்டண முறைகளை விரிவுபடுத்துவதோடு, சீனப் பயணிகளுக்கு அதிக வசதியை வழங்குகிறது.
இது வளர்ந்து வரும் டிஜிட்டல் முறைமையை மேலும் பலப்படுத்துகிறது. இதனால் பயணிகள் தங்களது விமான பயணச்சீட்டுகளை இலகுவாக முன்பதிவு செய்துகொள்ள முடியும் .