சீருடை விவகாரம்; மீண்டும் யாழ்.மாநகரசபை உறுப்பினருக்கு வந்த அழைப்பு
யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட கண்காணிப்பாளர்களின் சீருடைய விவகாரம் தொடர்பிலான விசாரணைக்கே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சீருடை விடுதலை புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்ததாக உள்ளதென கூறி மாநகர முதல்வர் கைது செய்யப்பட்டதுடன் அந்த விடயம் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.
அதன்பின்னர் தற்போது மீண்டும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளதாக கூறப்படும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரின் விசேட பிரிவினர் இன்று காலை 10 மணிக்கு மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபனை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும்க் கூறப்படுகின்றது.