இரவுவேளை ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய இனம் தெரியாத குழு!
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று சனிக்கிழமை இரவு இனம் தெரியாத குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டனர்.
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இடம் பெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் விவசாய காணிகளை உழவு செய்ய முற்பட்ட சமயம் கோவில் மோட்டை விவசாயிகளுக்கும், அருட்தந்தை உள்ளடங்களான குழுவினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் குறித்த விடயத்தை அறிக்கையிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த ஊடகவியலாளர் நேரடியாக சம்பவ இடத்தில் இருந்து சேகரித்த தகவலின் அடிப்படையில் குறித்த செய்தியை ஊடகங்கள் ஊடாக வெளியிட்டார்.

நேற்று சனிக்கிழமை இரவு குறித்த ஊடகவியலாளரின் பண்டிவிரிச்சான் பகுதியில் உள்ள அவருடைய வீட்டை சூழ்ந்து கொண்ட இனம் தெரியாத நபர்கள், வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விடயத்தை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்ட நிலையில் அக்குழுவினர் அப்பகுதியில் இருந்து தலைமறைவாகி உள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் உடனடியாக மடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.