நாட்டில் நிழவும் சீரற்ற காலநிலை ; சுகாதாரப் பணியாளர்களின் வீர செயல்
நாட்டில் நிழவும் சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாமல் சுகாதார துறை சார்ந்தவர்கள் செய்யும் செய்யும் அர்பணிப்புகள் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
தன் உயிரையும் பொருட்படுத்தாது கடும் வெள்ள பெருக்கிற்கு நடுவில் நடந்து சென்று சேவை செய்யும் இவ்வாறான பணியாளர்களை போற்ற வேண்டும்.

இலங்கையில் தாய்–சிசு மரண வீதம் உலகின் பெருவளர்ச்சியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இவர்களின் அர்ப்பணிப்பு, நெகிழ்வான சேவை மற்றும் தொடர்ச்சியான தாய்க் கவனிப்பே என சுகாதார துறை வலியுறுத்துகிறது.
மேலும், பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக் குழந்தைகள் ஆரோக்கியத்திலும், போசாக்குத்தன்மையிலும் முன்னிலை வகிப்பதற்கும் நடுவிளைப்பெண்கள் வழங்கும் மடிமுதல் பராமரிப்பு, வீட்டுக்குச் செல்லும் சுகாதார கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகள் பெரும் பங்காற்றுகின்றன.
ஒரு தாய் கர்ப்பம் முதல் பிரசவம் வரை அனுபவிக்கும் சவாலான பயணத்தில், அவர்களின் பாதுகாப்பையும், குழந்தையின் நலத்தையும் உறுதி செய்யும் இவர்கள் சுகாதார அமைப்பின் அடித்தள வீராங்கனைகள் என்பதில் ஐயம் இல்லை.