போர் கால வன்முறைகளில் மௌனம் ; இலங்கை மீது ஐ.நா கடும் குற்றச்சாட்டு
இலங்கையில் மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் இன்றுவரை கவனிக்கப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் இன்று வெளியிட்ட ஆய்வறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும், நீண்டகாலமாக நீதி மறுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சமூகத்தினர் பயம், அவமானம் மற்றும் பழிவாங்கலுக்கு அச்சப்படுவதே இதற்கு காரணம் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
குறிப்பாக 2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர், அரச படைகளாலும், இராணுவத்தினராலும் பாலியல் வன்முறைகள் பரவலாக நிகழ்த்தப்பட்டதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்தும் நாட்பட்ட உடல் காயங்கள், மலட்டுத்தன்மை, உளவியல் முறிவுகள் மற்றும் தற்கொலை எண்ணங்களால் அவதிப்படுவாதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், உள்நாட்டு பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கும், மாற்றத்தக்க சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.