ஐ.நா. சபையில் இத்தனை நாடுகள் இலங்கைக்கு ஆதரவா?
நல்லிணக்கத்துக்கான அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்கு உலகில் உள்ள பலர் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பில் பேசிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. தெற்கு, தென்கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்தன.
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்புக்காக அவர் பாராட்டினார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சமர்பித்த அறிக்கை கடுமையான முரண்பாடுகளையும் பலவீனங்களையும் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.