போரில் ரஷ்ய அதிபர் புதின் நிச்சயம் தேல்வியடைவார்! பிரித்தானிய பிரதமர் காட்டம்
உக்ரைனுடனான மோதலில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் (Vladimir Putin) தோல்வியடைவார் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (boris Johnson) கடுமையாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
இதேவேளை, உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்யப் படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழலை நிலவி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரையும் நெருங்கியுள்ள ரஷ்யப் படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய அதிபர் ர் விளாதிமிர் புதின் தோல்வியடைவார் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் (boris Johnson) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உக்ரைனில் பயங்கரமான மோதல் நடைபெற்று வரும் நிலையில் இதில் புதின் தோல்வியடைவார். நமது உக்ரைன் நண்பர்களுக்கு நாம் தொடர்ந்து உதவுவோம். எவ்வளவு நாட்கள் செல்கிறது அவ்வளவு நாட்கள் நாம் தொடர்ந்து உதவிகளை செய்வோம்’ என்றார்.