ரஷ்ய வீரர்களை குப்பற படுக்க வைத்த உக்ரைன் வீரர்கள்!
ரஷ்ய வீரர்கள் பலரை உக்ரைன் படையினர் பிடித்து வைத்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் 1 மாதத்திற்கு மேலாக போர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
சற்றும் சளைக்காத உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது.
ரஷ்யாவை சேர்ந்த 7 தளபதிகளை இதுவரையில் உக்ரைன் வீரர்கள் கொன்றுள்ளனர். உக்ரைனில் உள்ள ட்ரோஸ்டியானெட்ஸ் -ஐ கடந்த 1ஆம் திகதி ரஷ்ய வீரர்கள் கைப்பற்றினர்.
இதனால் ஓய்ந்துவிடாத உக்ரைன் வீரர்கள் மீண்டும் நகரை நேற்று தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் கொத்து கொத்தாக ரஷ்ய வீரர்களை உக்ரைன் படையினர் பிடித்து கைது செய்துள்ளனர்.
அதன்பின்னர் அவர்கள் துப்பாக்கி முனையில் தரையில் குப்புற படுக்க வைக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோவை உக்ரைன் வீரர் ஒருவர் எடுத்து வெளியிட வைரலாகியுள்ளது.