புடினுக்கு எதிராக திரும்பிய கூலிப்படையினர்; பாப்கார்ன் சாப்பிட்டு வேடிக்கை பார்க்கும் உக்ரைன் வீரர்!
ரஷ்ய அதிபர் புடினின் நிழல் கூலிப்படையான வாக்னர் கூலிப்படையினர் தற்போது ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் , உக்ரேனிய ராணுவ வீரர் ஒருவர் ரஷ்யாவில் நடக்கும் சண்டையை வேடிக்கை பார்த்தவண்ணம் பாப்கார்ன் சாப்பிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பாப்கார்ன் சாப்பிட்டு வேடிக்கை பார்க்கும் உக்ரைன் வீரர்
கடந்த 16 மாதங்களாக, உக்ரைன் போர் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதில் திடீர் திருப்பமாக ரஷியா ஆதரவு கூலிப்படை ரஷியா அரசுக்கு எதிராகவே திரும்பியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை உள்நாட்டுபோர் ஆரம்பமாகியுள்ளதாக வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் அறிவித்துள்ளமை பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
This can't be real! A Ukrainian soldier is eating popcorn while watching everything unfolding in Russia! ? #Wagner #Russia #Moscow #Prigozhin #Putin pic.twitter.com/6Lv7CiG42x
— Winnie (@fentywinnie) June 24, 2023
இவ்வாறான பதட்டமான சூழலில் உக்ரேனிய ராணுவ வீரர் சண்டையை வேடிக்கை பார்த்தவண்ணம் பாப்கார்ன் சாப்பிடும் காணொளி வெளியாகியுள்ளது.
கொடூரமாகவும் இரக்கமற்றும் செயல்படுவதில் பிரபலம்
வாக்னர் கூலிப்படை என்பது ரஷிய நாட்டின் துணை ராணுவ அமைப்பாகும். சட்டத்திற்கு அப்பாற்பட்டு வேலை செய்து வருகிறது. இது ஒரு தனியார் ராணுவ அமைப்பாகும். கிழக்கு உக்ரைனில் ரஷிய சார்பு பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிக்கும் போது இந்த குழு முதலில் 2014இல் அடையாளம் காணப்பட்டது.
அதேவேளை கடந்த 2014ஆம் ஆண்டில், பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலேயே இந்த ரகசிய அமைப்பு இயங்கி வந்தது. இந்த குழுவில் ரஷியாவின் உயரடுக்கு படைப்பிரிவுகள் மற்றும் சிறப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 5,000 போராளிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் முக்கிய அங்கமாக வாக்னர் கூலி படையினர் மாறியுள்ளது என்றும் ஜனவரி மாதம் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள பக்முட் நகரை ரஷியா கைப்பற்றியதில் வாக்னர் குழு முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. கொடூரமாகவும் இரக்கமற்றும் செயல்படுவதில் பிரபலம் அடைந்துள்ளது.
ரஷியாவுக்கு எதிராக வாக்னர் கூலிப்படை
கடந்த ஜனவரி மாதம், உக்ரைனில் டொனெட்ஸ்க் பகுதியில் உப்புச் சுரங்க நகரமான சோலேடரை ரஷியா கைப்பற்றியது.
இந்த நகரை தாங்களே கைப்பற்றினர் என்றும் வாக்னர் குழுவின் வெற்றியை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் பறிக்க நினைப்பதாகவும் வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் குற்றம்சாட்டினார்.
ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்கள் முகாம்கள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்ததை தொடர்ந்தே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் படைமுகாம் மீது ரஸ்ய படையினர் ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
எங்கள் தோழர்கள் பலர் கொல்லப்பட்டனர் அவர்கள் எங்களை ஏமாற்ற முயல்கின்றனர் என வாக்னர் கூலிப்படையின் தலைவ பிரிகோஜின் தெரிவித்திருந்தார்.