உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வராததற்கான காரணம் வெளியானது! பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் தகவல்கள்
உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வராததற்கு அமெரிக்கா தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov இது தொடர்பில் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்கவிடாமல் உக்ரைனை அமெரிக்கா தான் தடுக்கிறது என Sergei Lavrov கூறியதாக மேற்கோள் காட்டி ரஷ்யாவின் Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில் ஈடுபடும் உக்ரேனிய பிரதிநிதிகள் அமெரிக்கர்களின் பிடியில் சிக்கியிருப்பதாக தெரிகிறிது.
எங்களுடைய குறைந்தபட்ச கோரிக்கைகளை கூட ஏற்க அவர்கள் அனுமதிக்கவில்லை என Sergei Lavrov கூறியதாக மேற்கோள் காட்டி ரஷ்யாவின் Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் நிலைப்பாட்டை அமெரிக்க கட்டுப்படுத்துகிறது என்ற கருத்துக்கு Lavrov எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.
சமீபத்திய வீடியோ உரையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமைதிக்கான அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
இது சந்திப்பதற்கான நேரம். பேசுவதற்கான நேரம், என்று அவர் புட்டினுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.