கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் உட்பட மூவர் கைது
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய கார் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் பகுதியில் யாழ். குற்றத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் காரிலிருந்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் வாடகைக்கு பெறப்பட்டுள்ளதோடு ஜி.பி.எஸ் முறை மூலம் அக் கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் திட்டமிட்ட குற்றவாளியான காஞ்சிபானி இம்ரானின் ஆதரவாளர் என்றும், இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையிலான தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.