உக்ரைன் - ரஷ்யா மோதலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன?
உக்ரைன் - ரஷ்யா இடையே அண்மைக்காலமாக போர் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கும் அதனால் பாதிப்பு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் இது மேலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது.
இலங்கைக்கு அதிகளவிலான வருமானத்தை பெற்றுதரக்கூடிய பிரதான ஏற்றுமதி துறையாக தேயிலை ஏற்றுமதி துறை உள்ளது. அந்த துறையின் வழியாக சுமார் 1. 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருவாய்யை ஆண்டு தோறும் இலன்கை பெற்று வருகின்றது.
இலங்கை ஆண்டுத்தோறு ஈராக்கிற்கு அதிகள்விலான தேயிலையை ஏற்றுமதி செய்வதுடன் அதற்கு அடுத்ததாக துருக்கிக்கும் ஏற்றுமதி செய்கிறது. மூன்றாவது நாடாக கருதப்படும் ரஷ்யாவிற்கு கடந்த ஆண்டு சுமார் 2 கோடியே 90 இலட்சம் தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது.
இதன்மூலம் இலங்கைக்கு கிட்டத்தட்ட 2.500 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை தேயிலைத்துறையில் தலைவர் ஐயம்பதி முரளி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தேயிலை ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் உக்ரைன் பதினெட்டாவது இடத்தை பிடிக்கின்றது. உக்ரைனுக்கு கடந்த ஆண்டு 40 இலட்சம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் அதன் மூலமாக இலங்கைக்கு 427 கோடியே 90 இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
இவ்வாறான நிலையில் அந்த இரண்டு நாடுகளிடையே மோதல் நிலவி வருவதால் தேயிலை ஏற்றுமதி மூலமாக நாட்டிற்கு கிடைக்கும் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் இலங்கை தேயிலைத்துறை பெரிதும் பாதிக்கப்படும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபசெயலாளரும், சர்வதேச விவாகார பெறுப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவிக்கின்றார்.
ஐரோப்பிய நாடுகள் இலங்கையிடம் இருந்து குளிர்கால தேவைக்காக கொள்முதல் செய்யும் தேயிலை அளவு கடந்த ஆண்டு அதிகமாக காணப்பட்டது என அவர் கூறுகின்றார். இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நாடுகளில் ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளும் காணப்படுகின்றன.
குறிப்பாக கடந்த ஆண்டு குளிர்கால தேவைக்கான தேயிலை கொள்முதலில் கிலோ கிராம் ஒன்றிற்கான விலை மிக அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக 2020 ஆண்டு 866.7 ரூபாயாக காணப்பட்ட ஒரு கிலோ கிராம் தேயிலையின் விலை 2021 ஆம் ஆண்டு இறுதியில் 920.76 ரூபாயாக காணப்பட்டது.
இதன்படி உயர் நில பரப்பில் வளரும் தேயிலையை ரஷ்யா போன்ற நாடுகள் அதிகளவில் கொள்முதல் செய்துள்ளதாக பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
தற்போது ரஷ்யாவிற்கு ஐரோப்பிய நாடுகள் பொருளதார தடைகளை விதித்துள்ள நிலையில் வங்கி கொடுக்கல் வாங்கல் முறையில் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தற்போது காணப்படும் போர் சூழலுக்கு மத்தியில் ரஷ்யாவிற்கு நேரடியாக தேயிலையை ஏற்றுமதி செய்யமுடியாது என்பதுடன் ரஷ்யாவுடன் நன்புறவை கொண்ட சீனா உள்ளிட்ட நாடுகள் மூலமாகவே ஏற்றுமதி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் பராத் அருள்சாமி தெரிவிக்கின்றார்.
இவ்வாறு சீன மூலமாக தேயிலை ஏற்றுமதி செய்யப்படும் பச்சத்தில் அது சீனாவின் நாணய அலகான எண் நாணயத்தில் அடிப்படையிலேயே செய்ய வேண்டியே கட்டாயம் ஏற்படும் என்பதுடன் சிலோன் டீ என்ற பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் கூறுகின்றனர்.
தேயிலையில் சீனா இலங்கைக்கு பேட்டி நாடூ என்ற அடிப்படையில் சிலோன் டீ என்ற பெயருக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும் பச்சத்தில் அது தேயிலை உற்பத்தித் துறையை பாதித்து அதன்மூலமாக தேயிலை தொழில்த்துறையை நம்பி வாழும் மலையக மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.