ரஷ்யாவுக்கு எதிராக போரில் களமிறக்கும் 80 வயது முதியவர்! சூட்கேஸில் வைத்திருந்த பொருள் (Photos)
80 வயது முதியவர் ஒருவர் தனது பேரக்குழந்தைகளுக்காகப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக போராடுவதற்காக சிவிலியன் ராணுவத்தில் சேரத் தயாராகவுள்ளார். இதனை உக்ரைனின் முன்னாள் அதிபரின் மனைவி Kateryna Yushchenko இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த 80 வயதான முதியவர் 'பனியன், பல் துலக்கும் கருவி மற்றும் சாண்ட்விச்கள்' நிரப்பப்பட்ட சூட்கேஸை எடுத்துச் செல்லும் மனதைக் உருக்கும் புகைப்படத்தை வியாழன் இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை முன்னெடுத்ததால் இந்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.

மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் படைகளுக்கு எதிராக உக்ரைன் நாடு முழுவதும் பொதுமக்கள் ஆயுதம் ஏந்தி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.