ரஷ்யா - உக்ரைன் மோதல் தணியுமா? தணல் பறக்குமா?
உக்ரைன் - ரஷ்யா இடையே 5 வது நாளாக கடுமையான போர் நடந்து வருகின்றது.
மேலும் இந்த போரில் 4500க்கு மேல் ரஷ்ய இராணுவத்தினரும், 100க்கு மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் டாங்குகள் ஆகியவற்றை உக்ரைனில், ரஷ்யா இழந்துள்ளது.
இனி உக்ரைனுக்கு கிடைக்கப் போகும் உலக உதவிகளின் பின் நிலை என்னவாகும் என நினைத்தே பார்க்க முடியாதுள்ளது? நியூகிளியர் ஆயுதங்களை தயார் செய்யுமாறு புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
பெலாரஸ்ஸில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு உக்கிரேன் வர முடியாது என தெரவித்துள்ளார்கள்.
இதேவேளை, பெலாரஸ் ரஸ்யாவின் நட்பு நாடு. அங்கு வரும் உக்ரைன் அரச தரப்பினரை கைது செய்து ரஷ்யா பேரம் பேசலாம்? எனவே ஐரோப்பிய நாடொன்றுக்கு பேச வருமாறு உக்ரைன் அழைத்ததில் தவறில்லை.
எது எப்படியோ, கடுமையான காலம் இனி என அச்சமாக உள்ளது.