இரட்டைக் கொள்கையைக் கடைப்பிடிப்பக்கும் மேற்கத்தியத் தலைவர்கள்?
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் (Vladimir Putin) கடுமையான நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் மேற்கு நாடுகளின் தலைவர்களின் கொள்கையும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
மேற்கத்திய ஊடகங்கள் இந்தத் தாக்குதல் தொடர்பான செய்திகளில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவாகவே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும், மேற்கத்தியத் தலைவர்கள் இரட்டைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும் மேற்கு நாடுகளை சேராத நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை, மேற்கத்திய தலைவர்கள் ரஷ்யாவை வில்லனாகச் சித்தரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.இதேவேளை, தற்போதைய நெருக்கடிக்கு மேற்கு நாடுகளும் பொறுப்பாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஊடகவியலாளர்களின் வலையமைப்பான அரபு மற்றும் மத்திய கிழக்கு ஊடகவியலாளர்கள் சங்கம், மேற்கத்திய ஊடகங்களின் "இனவெறி" சார்ந்த செய்திகள் குறித்து ஒரு அறிக்கையில் கவலை தெரிவித்தது.